வன்முறையுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களிடம் 14 நாட்கள் விசாரணை

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டத்தின் கீழ், 14 நாட்கள் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கண்டி சம்பவம் தொடர்பில் இனவாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை தொடர்பில் நேற்று அதிகாலை இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]