வந்தாறுமூலைப் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் வியாழக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை இராசையா வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் மதியழகன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி சுதா மதியழகன் அடையாளம் காட்டியுள்ளார்.

புதன்கிழமை (06) இரவு 11 மணியளவில் உறவினர் வீட்டிலிருந்து உறங்குவதற்காக அவரது வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அருகிலுள்ள உறவினர் வீட்டில் உறங்கிவிட்டு காலை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக உடைகளை எடுபதற்காக வந்தசமயம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வந்தாறுமூலைப் பிரதேசத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]