வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வேகமாக சென்ற காரை நிறுத்துமாறு கடற்படையினராக சமிக்ஞை காட்டியுள்ளனர். எனினும் உத்தரவை மீறி சென்றமையினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]