வதந்தி பரப்பினால் கோர்ட்டுக்கு செல்வேன் – ராய் லட்சுமி ஆவேசம்

நடிகை ராய் லட்சுமி பற்றி கடந்த சில நாட்களாக வதந்தி ஒன்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இது தொடரும் பட்சத்தில் தான் கோர்ட்டிற்குகூட செல்வேன் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே லட்சுமிராய் பற்றி திடுக்கிட வைக்கும் கிசுகிசுவை யாரோ சிலர் பரப்பி வருகின்றனர். அவர் கர்ப்பமாக இருப்பதாக பரப்பிவிட்டிருக்கிறார்கள்.

முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த லட்சுமிராய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் கூறும்போது, ஒரு சிலர் என்னை பற்றி முட்டாள்தனமான வதந்திகளை பரப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு பலமுறை காதல் உண்டாகி பின்னர் பிரேக்அப் ஏற்பட்டிருக்கிறது.

அதற்காக என் வி‌ஷயத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு உங்கள் இஷ்டத்துக்கு பேசலாம் என்று அர்த்தம் அல்ல. ஒரு நாள் நான் மாங்காய் சாப்பிட்டதை யாரோ ஒருவர் பார்த்திருக்கிறார். உடனே நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரப்பிவிட்டிருக்கிறார். இதை தடுத்து நிறுத்துவதற்கு நான் கோர்ட்டிற்குகூட செல்வேன்’ என்று கோபமாக கூறி இருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]