வட மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காலநிலை தொடர்பான எச்சரிக்கை

வடக்கு மாகா­ணத்­தில் குறிப்­பாக மன்­னார், வவு­னியா மாவட்­டங்­க­ளில் இன்­னும் சில நாள்­க­ளுக்­குக் கடும் வெயில் காணப்­ப­டும் என்று வானிலை அவ­தான நிலை­யம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

தற்­போது நாட­ளா­விய ரீதி­யில் கடும் வெப்­பத்­து­ட­னான கால­நிலை காணப்­ப­டு­கின்­றது. மதி­யம் 12 மணி முதல் 3 மணி வரை வெயி­லில் நட­மா­டு­வதை இய­லு­மா­ன­வரை குறைத்­துக் கொள்ள வேண்­டும் எ்னறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வடக்கு, மத்­திய மற்­றும் வட­மேற்கு மாகா­ணங்­க­ளில் வெப்­பத்­தின்தாக்­கம் அதி­க­மாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மன்­னார், வவு­னியா, கம்­பஹா மாவட்­டங்­க­ளில் இன்­னும் ஓரிரு நாள்­கள் வெப்­ப­நிலை அதி­க­ரித்­துக் காணப்­ப­டும்.

இது தொடர்­பில் அந்­தப் பகுதி மக்­கள் அவ­தா­னத்­து­டன் நடந்து கொள்ள வேண்­டும் என்று வானிலை அவ­தான நிலை­யம் அறி­வு­றுத்­தல் விடுத்­துள்­ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]