வட மாகாணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழர்களுக்கும் உண்டு

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிலைமை மிகவிரைவில் சுமூகமான ஒரு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எந்தவிதமான பிரிவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதனை சர்வதேச சமூகமும் விரும்பாது என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு பண்குடாவெளி றோமன் கத்தேலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து இராஜாங்க அமைச்சர்,

மலையகத்தை பொறுத்த வரையில் நாங்கள் கடந்த காலங்களில் பிரிந்து நின்று செயற்பட்டதன் காரணமாக எமக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக நாங்கள் தற்பொழுது தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அனைவரும் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனால் நாம் பல வெற்றிகளையும் பெற்றிருக்கின்றோம்.

எனவே, வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முதலமைச்சர் தொடர்பான நிலைமை காரணமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்த விதமான பிளவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எனது கருத்தாகும்.

கடந்த காலங்களில் வட, கிழக்கில் பல அமைப்புகள் பிரிந்து நின்று செயற்பட்டதால் இழப்புகளே அதிகம் ஏற்பட்டதே தவிர எந்த பயனும் அல்லது நன்மையும் கிடைக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரித்துவிட வேண்டும் என்பதில் இனவாதிகள் பலரும் மிகவும் உண்ணிப்பாக செயற்பட்டு வருகின்றனர்.அதற்கு ஒரு போதும் சந்தர்ப்பம் வழங்க கூடாது என்றும் வலியுறுத்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]