வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனுக்கு பிணை

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் விடுவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகி கையொப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்றைய தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற ரவிகரனிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரை கைதுசெய்தனர்..