வட சென்னை படத்தில் தனுஷின் புகைப்படங்கள் வெளியானது

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் வட சென்னை.

லைகா நிறுவனம் இணை தயாரிப்பில் வெளிவரவுள்ள இப்படத்தில், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் தனுஷின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு எதிர்வரும் 18ம் திகதி இப்படம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]