வட கொரியா
People watch a television broadcast of a news report on North Korea firing what appeared to be an intercontinental ballistic missile (ICBM) that landed close to Japan, in Seoul, South Korea, November 29, 2017. REUTERS/Kim Hong-Ji

வட கொரியா, தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தென்கொரியா ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அந்த புதிய பாலிஸ்டிக் ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லக்கூடிய திறன் பெற்றது என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், ஏற்கனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போன்று இந்த ஏவுகணையும் ஜப்பான் மீது பறந்து சென்றதா? அல்லது வேறு திசையில் ஏவப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஏவுகணை ஜப்பானின் கடல்பகுதியில் விழுந்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உலக பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என கண்டனம் தெரிவித்துள்ளன. இச்செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.