வட கொரியாவில் அணுஆயுத சோதனை நிறுத்தம்: டிரம்ப் மகிழ்ச்சி!!

வட கொரியா டிரம்ப் மகிழ்ச்சி!!

வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலையில், அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

ஏப்.,21 முதல் அணுஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டரில்கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப்…..!!