முகப்பு News Local News வட கிழக்கு அபிவிருத்தி குறித்து மைத்திரி விடுத்துள்ள பணிப்புரை

வட கிழக்கு அபிவிருத்தி குறித்து மைத்திரி விடுத்துள்ள பணிப்புரை

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, செயற்திறன் மிக்கதாக மாற்றி மக்களுக்கு கூடுதல் அனுகூலங்கள் கிடைக்க வழிவகுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

நீண்டகால யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று முதற் தடவையாக கூடியது.

இதன்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கத்தினால் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளன.

எனினும் அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லை.

அத்துடன் மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com