வட்டுக்கோட்டை ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வட்டுக்கோட்டை பொலீசாரினால் ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது.

யாழ் வட்டுக்கோட்டை பொலீசாரினால் 1.506 Kg கஞ்சா போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் ஒருவர் இன்று அதிகாலை பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் பன்னாகம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என வட்டுக்கோட்டை பொலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த பொலீசார் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]