வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!!

தமது வேலைவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் இன்றையதினம் கவனயீர்ப்பொன்றை மேற்கொண்டனர்.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வடமாகாணத்தைச்சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பொன்றையும் மேற்கொண்டனர்.

தற்போது நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் 2017ம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் உட்பட தகுதியுள்ள சகலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற அடிப்படையில் வடமாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை அராங்கம் கவனத்தில் கொள்வதுடன் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கும் விசேட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் அவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.

இவ்விடயங்களை வலியுறுத்து கொழும்பில் ஒன்றிணைந்த பட்டதாரிகளினால் எதிர்வரும் எட்டாம்திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தில் தாம் பங்கு கொள்ள இருப்பதுடன் இவ்விடயத்தை வலியுறுத்தி வடமாகாணரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் எதர்வரும் நாட்களில் தாம் முன்னெடுக்கவிருப்பதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் கிருசாந்த் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]