வடமாகாண முதலமைச்சர் இல்லாது பத்தொன்பது உறுப்பினர்களுடன் வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பான விசேட அமர்வு

போக்குவரத்து அமைச்சு

வடமாகாண முதலமைச்சர் இல்லாது பத்தொன்பது உறுப்பினர்களுடன் வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பான விசேட அமர்வு

யாழ்ப்பாணம்; வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்துகொள்ளவில்லை.

வடக்கு மாகாணசபையின் 127வது அமர்வின் விசேட அமர்வு இன்று (16) யாழ் கைதடியிலி உள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகிது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அமைச்சரவை விடயத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் பொருட்டு பத்தொன்பது உறுப்பினர்கள் எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இன்றைய (16) தினம் விசேட அமர்வு நடைபெற்றது.

இவ்விடயம் உச்ச நீதிமன்றில் உள்ளபடியால் தான் இதில் கலந்து கொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணிக்கணிப்பதாக அவைத்தலைவருக்கு என கடிதம் மூலம் அறிவித்து அமர்வை புறக்கணித்திருந்தார்.

அத்துடன் முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சரான ப.டெனீஸ்வரன் இவ் அமர்வில் கலந்துகொண்டபோதிலும் அவர் அங்கம் வகிக்கும் கட்சியான ரெலோ அமைப்பின் ஏனைய ஐந்து உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டிருந்தபோதும் மேற்படி விவாதத்தில் தாம் பங்குகொள்ளவில்லை என தெரிவித்து அமர்விலிருந்து வெளியேறினர்.

அதைத்தொடர்ந்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த விசேட அமர்வை ஆரம்பித்தார்.

ஏனைய மாகாண அமைச்சர்கள் எவரும் பங்குகொண்டிராத நிலையில் பத்தொன்பது உறுப்பினர்களுடன் இந்த விவாதம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]