வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும், வாழ்வினை உயர்த்தவும் வடமாகாணத்தினை மையப்படுத்தி “முன்னோக்கி நகர்வோம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில், யாழ்.கைலாசபிள்ளையார் ஆலய பின்வீதியில் இந்த செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான அலுவலகத்தில்அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே, இவ்வேலைத்திட்ட நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆன நிலையில், வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களிற்கு வினைத்திறனான சேவை வழங்கல் தொர்பில் மாகாண சபையும், மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வடமாகாண சபை முக்கிய வகிபாகம் வகிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் கடந்த நாக்கு வருட செயற்பாடுகள் மக்களிற்குப் பயன்தரக் கூடியதாக ஆக்கபூர்வமானதாக மற்றும் வினைத்திறன் உள்தாக அமையவில்லை என பரவலான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அதே போல், மத்திய அரசினுடைய நிறுவனங்களும் மக்களிற்கு சரியான சேவைகளை வழங்குவதில்லை என்ற குறைபாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த குறைபாடுகள் தொடர்பாக யாழ்.கைலாசபதி பிள்ளையார் ஆலய பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல் மூலம் தெரியாகிய உள்ளுராட்சி சபைகபள் வினைத்திறனாகச் செயற்படுமா என்ற கேள்வி குறியும் இன்று வடபகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்நிறுவனங்கள் வினைத்திறனுள்ளதாகவும், மக்களிற்குப் பயன்பாடுள்ளதாகவும் துரித கதியிலான சேவைகளை வழங்குவதாகவும், செயற்படுகின்றனவா என்பதனை இணங்கண்டு அவ்வாறு செயற்படுதவற்கு ஏதாவது நியாய பூர்வமான தடைகள் உள்ளனவா அல்லது வினைத்திறனற்ற ஆக்கபூர்வமற்ற மநத கதியிலான செயற்பாடுகள் மற்றும் ஊழல் போன்றவை இவற்றிற்கான காரணிகளா என்பதனை கண்டறிந்து மக்கள் முன் கொண்டு வருவதன் மூலம் இவற்றின் செயற்பாடுகளை முன்நோக்கி நகர்த்துவதே இந்த செயற்திட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.
வடமாகாண அபிவிரு;தி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் விதவைகளின் நிறைபேறு வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு இவ் அரச நிறுவனங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதோடு, அவ்வாறான திட்ட்ங்களைத் துரித கதியில் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் “முன்னோக்கி நகர்வோம்” வேலைத்திட்டத்தின் வழங்குவதற்கும் தயாராகி வருகின்றது.
மக்களின் வளமான வாழ்விற்கு அல்லது வாழ்வின் மேம்பாட்டிற்கு இந்த நிறுவனங்கள் செயற்பாடுகளிற்கு உந்து சக்தியாக இருந்து செயற்படுவதே எமது குறிக்கோள் குறிப்பாக வடமாகாண சபையினையும், உள்ளுராட்சி சபைகளினையும் மேலும் வினைத்திறனாக செயற்பட வைப்பதற்கு உதவுவதே இதன் நோக்கமாக காணப்படுகின்றது.
கட்சி பேதங்களின்றி இவ் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊழலற்ற வினைத்திறனான செயற்பாட்டினை நோக்கி முன்நகர்த்த உடன்படும் அனைவரும் இந்த செயற்திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த செயற்திட்டத்தில் நிபுணர்கள், மற்றும் எந்த மாவட்டத்திலும் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் இணைந்துகொள்ள முடியுமென்றும், இவ் வேலைத்திட்டத்திற்கான களத்தினை அமைத்துக்கொடுக்கப்படுமென்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் அ.பரம்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் உள்ளிட்ட, சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் குகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.