2 பொது மக்களுக்கு ஒரு படையினர் – வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்

  1. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பொது மக்களுக்கு ஒரு படையினர் என்ற விகிதாசாரத்தில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கவனயீர்ப்பு அறிக்கையின் ஊடாக சபையில் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண சபையின் 108வது அமர்வு இன்று (26.10) பேரவையில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.அதன்போது, வடமாகாண சபை உறுப்பினர், முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் குவிப்பு தொடர்பிலும் திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் விழிப்புக்குழுவாக செயற்படுகின்றதாகவும் பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.

அந்த கவனயீர்ப்பு அறிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 42 ஆயிரத்து 622 குடும்பங்கள். 1 லட்சத்து 34 ஆயிரத்து 528 மக்கள் வாழ்க்கின்றார்கள். இலங்கையில் 2 லட்சத்து 43 ஆயிரம் இராணுவம் உள்ளனர். அதில் 60 ஆயிரம் முல்லைத்தீவில் உள்ளதாக ஆய்வுகளில் இருந்து தெரியவருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாணத்தில் அதிகமான படைக்குவிப்பு உள்ளது. 2 பொது மக்களுக்கு 1 சிப்பாய் என்ற வகையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா கடத்தல் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றனநடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அவற்றினைத் தடுப்பதற்கு எமது இளைஞர்கள் விழிப்புக்குழுவாக செயற்பட்டு மக்களை பாதுகாக்கப்பட வேண்டிய நிலமை உள்ளது. சனத் தொகையில் இராணுவத்தினர் அதிகமாக இருப்பதனால், யாரிடம் சென்று இவ்வாறான களவுகள் நடப்பதாக மக்கள் முறைப்பாடு செய்ய முடியுமென்றும் கேள்வி எழுப்பினார்.
இளைஞர்கள் விழிப்புக்குழுவாக மக்களைக் காவல் காக்கும் விடயங்கள் கூட திசை திருப்பப்படுமா என்ற பயமும் உள்ளது. எனவே, சபை உரிய கவனத்தில் எடுத்து பொருத்தமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினா.