வடமாகாண கல்வி அமைச்சர்க்கு அழைப்பு விடுத்துள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவினர்

பரமேஸ்வரன் என பெயர் குறிப்பிட்டு வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடைச்சட்டத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பயங்கரவாத தடைச்சட்ட அலுவலகத்தில் இருந்து வருவதாக தெரிவித்து இருவர் வடமாகாண கல்வி அமைச்சரின் வீட்டிற்கு சென்று முகவரி மற்றும் யார் அனுப்பியவர்கள் என்ன விடயத்திற்கான விசாரணைகள் என குறிப்பிடாது சிறு துண்டில் எழுதிக் கொடுத்துள்ளனர்.

அதன்போது, வாய் வார்த்தையாக எதிர்வரும் 05 ஆம் திகதி தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு விசாரணை ஒன்று செய்ய வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் இன்றி ஒரு வடமாகாண அமைச்சரை விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமைச்சர் இருந்தும் அன்றைய தினத்தில் வர முடியாதென்றும், உத்தியோகபூர்வமான அறிவத்தல்களுடன் வருமாறும் பயங்கரவாத தடைச்சட்ட அலுவலகத்தில் இருந்து அமைச்சரின் வீட்டிற்கு சென்ற இரு அலுவலகர்களிடமும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]