வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பில் முதலமைச்சரிடம் விளக்கம் கோரி கடிதம்

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பில் முதலமைச்சரிடம் விளக்கம் கோரி கடிதம்

வடமாகாண கல்வி அமைச்சர்

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விளக்கமளிக்குமாறு ஆளுனர் இன்று கடிதம் மூலம் கோரியுள்ளார்.

முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம் முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசிய கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் விளக்கமளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்கள் சிலவும் முதலமைச்சருக்கு ஆளுனரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]