வடமாகாண ஆளுனராக மீண்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட்கூரே!!

வடக்கு மக்களின் வேண்டுகோளிற்கமையவே தம்மை ஜனாதிபதி மீண்டும் வடக்கிற்கு அனுப்பியுள்ளதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்கூரே தெரிவித்துள்ளார்

வடமாகாண ஆளுனராக மீண்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட்கூரே இன்று தனது கடமைகளை உத்தியோபூர்வமாக பொறுப்பேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

வடமாகாண ஆளுனராக ரெஜினோல்ட் கூரே அவர்கள் கடந்த 13ம் திகதி ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில் அவர் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

இன்றுகாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டவர்களும் இந்நகழ்வில் இணைந்திருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]