வடமாகாண அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது – ரெஜினோல்ட் குரே

யாழ்ப்பாணம் ; மத்திய அரசாங்கத்தினால், வடமாகாண அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் பரந்தளவில் முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரிட்டன் பாராளுமன்ற குழுவினருக்கு எடுத்துரைத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டு,  வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த சந்திப்பு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (06) நண்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் உட்பட வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவ கட்டமைப்புக்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

அதேவேளை, மக்களின் ஜனநாயக உரிமைகள், காணாமல் போனோரின் விபரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.

வடமாகாணத்தில் எவ்வளவு எண்ணிக்கையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் விசேடமாக வடமாகாணத்தில் கல்வி, சுகாதாரம், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

அதேவேளை, அபிவிருத்திச் செயற்பாடுகள், மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போதும், மத நிகழ்வுகளின் போது, இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், வடமாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம் 15 ஆயிரம் மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாகவும் பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரெஜினோல்ட் குரே ரெஜினோல்ட் குரே ரெஜினோல்ட் குரே ரெஜினோல்ட் குரே ரெஜினோல்ட் குரே ரெஜினோல்ட் குரே

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]