வடமாகாணத்தில் நாற்பதாயிரம் பேர் வேலைவாய்ப்பைக் கோரி பதிவு!

வடமாகாணத்தில் நாற்பதாயிரம் பேர் வேலைவாய்ப்பைக் கோரி பதிவு!

வடமாகாணத்தில்

வடக்கு மாகாணத்தில் தற்போது 40 ஆயிரத்து 493 பேர் வேலை வாய்ப்புக்கோரி மாவட்டச் செயலகங்களில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் 5 மாவட்டத்திலும் வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களில் குறிப்பிட்டளவானோரே மாவட்டச் செயலகங்களில் தமது பதிவினை மேற்கொண்டுள்ளபோதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இதன் பிரகாரம் அதி உச்சமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 ஆயிரத்து 632 இளைஞர்களும் , வவுனியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 840 இளையோரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 635 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 282 பேரும் உள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 94 பேர் வேலை வாய்ப்புக்கோரி மாவட்டச் செயலகங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த எண்ணிக்கையானோர் வேலை வாய்ப்புக்கோரி பதிவுகளை மேற்கொண்டிருந்தபோதிலும் பதிவுகளை மேற்கொள்ளாதும் பலர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]