வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் புதிய உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு!!

வடமாகாணத்தில் உள்ளுராட்சி திணைக்களங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு இன்று நடைபெற்றது.

வடமாகாண உள்ளுராட்சி திiணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகம், யு.என்.டி.பி ஆகியவற்றின் அணுசரணையில் இந்த கருத்தமர்வு இடம்பெற்றது.

யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தமர்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு, சட்டவாக்கம் மற்றும் அதிகாரங்கள் தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.