வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ் மாவட்ட முஸ்லிம்கள் இன்றையதினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக யாழ் மாவட்ட முஸ்லிம்கள் இன்றையதினம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் யாழ் நாவாந்துறை நான்கு சந்தியிலுள்ள ஜிம்மா பள்ளி வாசலில் இடம்பெற்ற மதியநேர ஜிம்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றுகூடிய இவர்கள் தமது எதிர்;புக்களை வெளியிட்டனர்-
இவ்விடயத்தில் தனது சொந்த மதத்தினை மதிக்காமல் அஸ்மின் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை அவர் நிறுத்திக்கொள்வதுடன் இதற்காக அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர்

ஆத்துடன் அயூப் அஸ்மினுடைய உருவ பொம்மையினையும் ஊர்வலமாக இவர்கள் எடுத்துச்சென்றதுடன் நான்குசந்தி பகுதியில் அதனை தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]