வடமராட்சி வல்லைவெளியில் இடம்பெற்ற விபத்தில் முதியவா் ஒருவா் பலி!!

வடமராட்சி வல்லைவெளியில் இடம்பெற்ற விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்றையதினம் (03-03-2018) 8 மணியளவில் இந்த விபத்து வல்லைவெளியில் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேலைமுடித்து வல்லை வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவா் மீது முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், இந்த நிலையில் சைக்கிளில் பயணித்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி வீதியில் புரண்டு விழுந்துள்ளதுடன், சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதியை தேடும் முயற்சியில் பொலிஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

குறித்த விபத்தில் 60 வயதுடைய முதியவா் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]