வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது.
யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி பிரதான வீதுயூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்த்து.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெ மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தெற்கு மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட அரச அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]