‘வடசென்னை’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி வெளியானது!

‘வடசென்னை’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம் ‘வட சென்னை’. இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் திகதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி அக்டோபர் 17 ஆம் திகதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக அக்டோபர் 17 ஆம் திகதி வெளியிடவுள்ளது.

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியானது பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]