வடசென்னையை முன்னிட்டு தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிம்பு

வடசென்னையை முன்னிட்டு தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்  நடித்துள்ளார்.

அத்தோடு, இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது.

இந்நிலையில், வடசென்னை ரிலீசை முன்னிட்டு தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில் கூறியிருப்பதாவது, ‘அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]