முகப்பு News Local News வடக்கை வீழ்த்தியது கிழக்கு……

வடக்கை வீழ்த்தியது கிழக்கு……

தமிழ் பரா விளையாட்டின் மற்றும் ஒரு போட்டியான பார்வையற்றவர்களுக்கான சத்தப் பந்து 10 க்கு 10 கிரிக்கெட் போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் வடக்கு மாகாண யாழ் விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் இடையில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியின் தலைவர் M. ஜதீஸ் வடக்கு மாகாண யாழ் விழிப்புலனற்றோர் சங்க அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியினர் தமது 64 என்ற இலக்கினை 8 ஓவர்களில் நிறைவு செய்து 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றதோடு இவ்வாண்டிற்கான ஆட்ட நாயகனுக்கான விருது எமது அணியை சேர்ந்த S. செந்தூரன் என்பவருக்கே கிடைத்தது.

2018 ம் ஆண்டிற்கான தமிழ் பரா போட்டியின் ஷம்பியனாக கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணி வெற்றி வாகை சூடிக்கொண்டதோடு இப்போட்டியானது கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்று வருகின்றன. இதில் கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியினர் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் ஷம்பியனாகி கெற்றிக் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com