முகப்பு News Local News வடக்கு முதல்வர் சி.வி ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

வடக்கு முதல்வர் சி.வி ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

வடக்கு மக்களை சுயமாக வாழ உதவி புரிய வேண்டும் என்பதையே தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அந்த அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com