இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட்தினால் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை, வட மாகாண முதலமைச்சருடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதுவர் திறந்து வைத்தார்.
அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பார்வையிட்ட அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது பற்றியும் கடற்றொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், ரொபேர்ட் ஹில்டன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]