வடக்கு மாகாண பொதுமக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ..

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(31) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்டைதீவு இலங்கை கடற்படை முகாம், மண்கும்பான், மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், வேலணையின் ஒரு பகுதி, சோளாவத்தை ஆகிய பகுதிகளிலும்,

காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர், யுனிச்செலா, பொறியியல் பீடம், விவசாய பீடம், Mas Active, Farm House, North Cargill’s Agri Foods ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சிதம்பரபுரம், கற்குளம், ஆசிக்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம், கூமரசங்குளம், குடாகச்ச கொடிய, குடாகச்ச கொடிய கல் உடைக்கும் ஆலை, மகா மயிலங்குளம், துட்டுவாகை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]