‘வட மாகாண சபை’யின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ. நியாஸ், சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் முதன்முதலாக அவைக்கு வருகை

வட மாகாண சபை

யாழ்ப்பாணம்; ‘வட மாகாண சபை’யின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ. நியாஸ் மற்றும் சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் இன்று (27) பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து முதன்முதலாக அவைக்கு வருகை தந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) 117வது அமர்வு ஆரம்பமாகியது. அதன்போது, இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வட மாகாண சபையின் உறுப்பினரான இம்மானுவேல் ஆர்னோல்டிற்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினரான சபாரட்ணம் குகதாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்த றயிஸ் ராஜினாமா செய்து கொண்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இருவரும்; தமது கன்னியுரையினை சபையில் ஆற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]