வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் -மஹிந்தவின் முடிவால் வரவிருக்கும் பெரும் மாற்றம்

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ரெஜினோல்ட் கூரே பதவி வகித்து வருகின்றார்.

இந்நிலையில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றில் நிருபித்த உடனே தாமதம் எதுவுமில்லாமல் தமிழ் ஆளுநர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய தமிழ் ஆளுநராக சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனின் பெயர் முன்மொழியபட்டுள்ளதாக அறிய கிடைகின்றது.

வித்தியாதரன் மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசனுடைய நெருங்கிய நண்பர் என்பதால் மகிந்தவுக்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த சனிக்கிழமை மாகாண ஆளுநர் விடயம் தொடர்பில் வித்தியாதரனுடன் மஹிந்த ராஜபக்ச தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]