முகப்பு News Local News வடக்கு தேர்தலை பிற்போட முடியாது

வடக்கு தேர்தலை பிற்போட முடியாது

ஏனைய மாகாண சபைகளின் தேர்தலை பிற்போடுவது போன்று வடக்கு மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை, என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து நீண்ட காலம் சென்றுள்ள போதிலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

அதேபோல் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையுவுள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்.

ஏனெனில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீது, நல்லாட்சி அரசாங்கம் அச்ச நிலையில் உள்ளது.

அத்துடன், பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தேர்தலை நடத்தாது தொடர்ந்தும் விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு எதிர்பார்ப்பாராயின் அது முடியாத விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com