முகப்பு News வடக்கு தனி அரசாக மாறியுள்ளது – மஹிந்த

வடக்கு தனி அரசாக மாறியுள்ளது – மஹிந்த

தற்போதைய நிலையில் வடக்கு தனி அரசாக மாறியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வீ.கே இந்திகவின் பூதவுடலுக்கு நேற்று இறுதி மரியாதை செலுத்திய மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

தெற்கில் உள்ள பிரச்சினைகள் வேறு வடக்கு பிரச்சினைகள் வேறு. வடக்கில் தனி அரசாங்கம் ஒன்று செயற்படுகின்றது. தற்போதைய அரசாங்கமே இதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அர்ஜூன் மகேந்திரன் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் வைத்து வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் மறுதினமே தாமும் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com