வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான வெப்பநிலை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான வெப்பநிலை

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றைய தினம் (சனிக்கிழமை) அதிகளவான வெப்ப நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

மேலும் உஷ்ணமான காலநிலை நிலவும் பகுதிகளில் உள்ளவர்களை அதிகம் நீர் அருந்துமாறும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிழலான பகுதிகளில் நேரத்தை செலவிடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், கடுமையான வேலைகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]