வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். கிழக்கு என்பது ஒரு இனத்துக்குச் சொந்தமானது அல்ல இது போன்று வடக்கு என்பது ஒரு இனத்துக்கு சொந்தமானது அல்ல இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும் என மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள்

கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூன்று இன மக்களையும் இரத்த கறைக்குள் கையளிப்பதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை மட்டக்களப்பு ஏறாவூர் பதீயுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – இனிவரும் காலங்களில் மாகாண சபைத் தேர்தல்; தொகுதி அடிப்படையில் நடைபெறவுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 11 உறுப்பனர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களையும் ஒவ்வொரு தொகுதியாக மாற்றுங்கள் இதனால் இனப்பிரச்சினை தொகுதிப் பிரச்சினைகள் ஏற்படாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைத்துள்ளோம், அது சிறந்த ஆலோசனை என ஏற்றுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன. தற்போது 11 உறுப்பினர்கள் உள்ளார்கள், இன்னும்  மூன்று உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டி வரும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள்

மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் முரண்படாமல் பிளவுகள் ஏற்படாமல் தங்களுடைய பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு ஒற்றுமையாக செயற்படுவது என்பது பற்றி சிந்திக்கவேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இநத விடயத்தில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். கிழக்கு என்பது ஒரு இனத்துக்குச் சொந்தமானது அல்ல வடக்கு என்பது ஒரு இனத்துக்கு சொந்தமானது அல்ல இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெழிவாக இருக்க வேண்டும். ஒவ்;வொரு மாகாணங்களும் அந்த மாகாணத்தில் வாழும் ஒவ்வொரு மகனுக்கும் சொந்தமானது.

கிழக்கு மாகாணத்தை மூன்று இனத்தவரும் ஆளவேண்டும். கிழக்கில் தமிழ் சகோதரர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இன்று ஹாபிஸ் நஸீர் முதலமைச்சராக உள்ளார், நாளை விமல வீர திஸாநயக்க முதலமைச்சராக வரக்கூடும்.; இவ்வாறு மூன்று இன மக்களும் ஒற்றுமையாக நிருவாகம் செய்யக்கூடிய ஒரே மாகாணம் கிழக்கு மாகாணம்தான்.

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைத்து கிழக்கை அனாதரவாக்கி மீண்டும் இந்த மண்ணிலே இரத்த ஆறு ஓடவைத்து யுத்த சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் யாரும் இடமளிக்க மாட்டோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அல்லது ஏனைய கட்சிகளுடைய பிரதிநிதிகளினால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான சில ஆலோசனைகள் முன்வைக்கின்ற நிலையில் எதிர்வரும் 21ம் திகதி இடைக்கால அறிக்கையை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள்

யுத்தம் மாத்திரம் முடிவடைந்துள்ளது இன்னும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இந்த அரசாங்கம் கொடுக்க தவறுமாகவிருந்தால் வடகிழக்கில் யுத்தம் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

அதிகாரங்கள் நிறைந்த தங்களுடைய நிருவாகத்தை தாங்களே செய்யக்கூடிய வளமான மாகாணசபைகள் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு என தனியான மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமே எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி யாராவது பேசிக்கொண்டிருந்தால், அது சாத்தியப்படாத விடயம். அரசாங்கத்தின் பலம் எதிர்கட்சிகளின் பலம் இந்த சூழ்நிலைகளில் சாத்தியமான முறையில் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூன்று இன மக்களையும் இரத்த கறைக்குள் கையளிப்பதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது முஸ்லிம்களும் இடமளிக்க கூடாது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களுடைய நிலைப்பாட்டினை பேசவில்லை. பாராளுமன்றத்திலும் பேசவில்லை எழுத்து மூலமாகவும் கொடுக்கவில்லை.

வடக்கும் கிழக்கும் இணைவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்று மிகத் தெளிவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பேசவேண்டும் எதிர்காலத்தில் இதுதான் எங்களுடைய பிரச்சினை என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]