வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட போது வழக்குத் தாக்கல் செய்யாதவர்கள் இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச முற்படுகிறார்கள்

வடக்கு கிழக்கு

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட போது அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதவர்கள் இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச முற்படுகிறார்கள்

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட போது அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதவர்கள் இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச முற்படுகிறார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றம் சுமத்தியுள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விலக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள ஒரு சிலரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இன்று (16) செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – “கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் 40 சதவீதம் இருந்தாலம் 20சதவீதமானவர்கள் மாத்திரமே வாக்களிக்கிறோம். இது நீண்ட காலமாக நடைபெறுகிறது. முஸ்லிம்கள் 37.5 சதவீதம் இருந்தாலும் அவர்கள் 35 சதவீதமானோர் வாக்களிக்கின்றனர்.

வட்டாரமுறைத் தேர்தல் முறையானது இன, சாதி, வட்டார, தெருப்பிரச்சினை, ஏழை பணக்காரன், நகர மற்றும் கிராம பிரச்சினை என ஒட்டு மொத்தமாக பல பிரச்சினைகளை உருவாக்கும் ஒரு தேர்தல் முறையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இந்த தேர்தல் முறையில் எதிர்வரும் காலங்களில் பல சூழ்ச்சிகள் செய்தவற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த காலத்தில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நான்கு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை உருவாக்கி சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ் விடுதலைக் கழகம் என நான்கு கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியிருந்தோம்.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நாம் பல உயிர்களை தியாகம் செய்தோம். பல சொத்துக்களை இழந்துள்ளோம். வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். பறிக்க முடியாத சுயாட்சி அமுல்ப்படுத்த வேண்டும் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்தகாலத்தில் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிட்டது. அதனடிப்படையில் நாங்கள் மக்களின் ஆணையைப் பெற்றோம்.

இவ்வாறிருக்கையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலரது பேச்சுக்களை கேட்டு இலங்கை அரசாங்கத்திற்கு விலைபோயுள்ளது. தேர்தலில் விஞ்ஞாபனத்தில் எம்மால் முன்வைக்கப்பட்ட சர்வதேச விசாரணை, சர்தேச நீதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள், இடைக்கால அறிக்கை தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு கொழும்பை மையமாக் கொண்ட ஈழ போராட்ட வரலாற்றில் எந்தவித அர்ப்பணடும் செய்யாதவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை கையிலெடுத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு விலை போய் அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்படத் தொடங்கினார்கள்.

எமது கட்சித் தலைவர் பல தடவை எடுத்துக்கூறிய போது அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு தெருவில் நிற்கும் நிலை உருவாகியது. இலங்கைத்; தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து போகும்வகையிலேயே அமைந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 19,649 விதவைகளும் 25 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட விதவைகள் 5000 பேர். தமிழர்களைப் பொறுத்தவரை இழப்பு என்பது விலை மதிக்க முடியாதவை.

1989 ஆண்டு வடக்கு கிழக்கை உருவாக்கி பொலிஸ் மாஅதிபரை நியமித்தவர்கள் நாங்கள் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆந் திகதி முதல் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 வரை வடக்கு கிழக்கு இணைந்திருதது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. தனியாக பொலிஸ் படை உருவாக்கி சட்டம் ஒழுங்கை செயற்படுத்தயவர்கள் நாங்கள்.

கிழக்கு மாகாணசபையைப் பொறுத்தவரை எமது பலவீனங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். எதிர்காலத்தில் எமது வாக்களிப்பு வீதத்தினை அதிகரிப்பதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மைத் தமிழர்களை நியமிக்க முடியும்.

வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு

கிழக்கு மாகாணத்தில் 11 ஆசனங்களைப் பெற்ற நாங்கள் கிழக்கு முதலமைச்சராக தமிழர் நியமிக்கப்பட வேண்டும் என பேசினோம். ஒரு சில சலுகைகளுக்காக மூன்று மாவட்டங்களுக்கும் பிரதிநதிகளை எடுக்க வேண்டும் என்பதற்காக தமிழர்களை விலை பேசி விற்றவர்கள் இவர்கள். உயர்பதவிகளை விட்டுக் கொடுத்து தமழ் பகுதிகளுக்கான அபிவிருத்தியை விட்டுக் கொடுத்தவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

வீடுக்கு அறிக்கும் வாக்கு இடைக்கால அறிக்கையை வடக்கு கிழக்கு மக்கள் எற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை தேசிய மற்றும் சர்வதேசத்துக்கு பறைசாயப்பதற்காக அளிக்கப்படும் வாக்குகள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து இடைக்கால அறிக்கைக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதற்காக இந்த தேர்தலில் அரசாங்கத்தால் தள்ளப்பட்டவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பினார் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை வெற்றிபெற வைத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கப்பதற்கான ஒரு தேலைத் திட்டத்தை தேசிய கட்சிகள் முன்னெடுத்துள்ளன. என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]