வடக்கு கிழக்கு இணைப்பு அவநம்பிக்கையால் தளர்வடைந்துள்ளது. சட்டத்தரணி கே. ஐங்கரன்

சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்காக முன்மொழியப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு அவநம்பிக்கையால் தளர்வடைந்துள்ளது. சட்டத்தரணி கே. ஐங்கரன்

சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்காக முன்மொழியப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விடயம் சிறுபானமை இனங்களான தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிலவும் அவநம்பிக்கையால் தளர்வடைந்துள்ளதாக தேசிய சமாதானப் பேரவை வளவாளர் சட்டத்தரணி கே. ஐங்கரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை 19.12.2017 மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்குமிடையிலான கலந்துரையாடல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு மேலும் விளக்கமளித்த அவர்

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் எனும் கோரிக்கையானது பின்னர் சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட நம்பிக்கையீனம் காரணமாக காலஞ்சென்ற தலைவர் அஷரப் அவர்களின் முன்மொழிவினால் ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் தனியலகு கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.

இந்த இடத்தில் நோக்கத்தை விளங்கிக் கொள்ளாது வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் பிரிக்க வேண்டும் என்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

சிறுபான்மைக் குழுக்களின் அபிலாஷை‪கள் பாதுகாக்கபப்ட வேண்டும் என்பதற்காகவே ஓரளவுக்காவது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் உதவும் என்ற அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு இணைப்பு என்ற முன்னெடுப்பு நடந்து கொண்டிருந்தது.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்படால் அங்கு வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்ற அச்சம் மேலோங்கியுள்ள நிலையில் இன்னமும் அவ நம்பிக்கைகள் வலுப் பெற்றுள்ளன.

சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவு இன்னொரு சிறுபான்மை இனத்தை மேலும் சிறுபான்மையாக மாற்றி விடுமா என்ற அச்சம் நிhயமானது.

அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமாக இருந்தால் மக்கள் தீர்ப்புக்குப் போக வேண்டும்.
இது அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ள ஒரு தேவைப்பாடாகும்.
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் சிறுபான்மை பெரும்பான்மை அற்ற முழு இலங்கைக்கும் அனைவரும் உரித்து என்ற பொறிமுறையை நோக்கி சிறுபான்மை சிந்திப்பதே சிறந்தது.

அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், பூகோள அரசியலின் நிலைமைகளுக்கேற்ற விதத்திலும் அந்தத் தருணத்திற்கு ஏற்ற மாதிரி நிலைமைகளை உருவாக்கிக் கொள்வார்கள்.

ஆனால் மக்களாகிய நாங்கள் அவர்கள் இழுக்கும் பக்கமெல்லாம் அசைந்தாட முடியாது.

என்னுடைய இன அடையாளம் அவருடைய இன அடையாளம் எந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்று வேறெதற்கோ வாதாடாமல் எல்லோரும் சமனாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் மக்கள் திடமான உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இடத்துக்கேற்ற பெரும்பான்மை ஆட்சியும் நிருவாகமும் என்று கோரும்பொழுது அந்தப் பிரதேசத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் நமக்கு எந்த வித உரிமையும் இல்லை என்றாகிவிடுகின்றது.

அவ்வாறான போக்கே தேசிய அரசியலிலும் பிரதிபலிக்கும். அது ஆபத்தானது. பிரதேசத்தவர்கள் பெரும்பான்மை என்றால் தேசிய அரசியலில் பெரும்பான்மைக்கான அங்கீகாரம் இயல்பாகவே கிடைத்து விடும்.

அரசியலமைப்பானது ஒவ்வொரு பிரஜையின் அடிப்படை உரிமைகளும் கௌரவமும் பேணிப்பாதுகாக்கப்படும்படியாக உருவாக்கப்பட்டால் அத்தகைய பொறிமுறை அனைவரின் உரிமைகளையும் சமமாகவே பாதுகாக்கும் என்பதுதான் புதிய அரசியலமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் விஜயநாதன் துஷாந்த்ரா, ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட திட்ட அதிகாரி கமாயா ஜயதிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]