வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு உதவுமாறு இந்தோனேசிய ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை

சம்பந்தன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு இந்தோனேசியா உதவ வேண்டும் என்று, இந்தோனேசிய ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக கொழும்பு வந்த இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, நேற்று மாலை இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், “ஆயுதப் போரினால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை வெகு தொலைவில் உள்ளது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைத்துலக ஆதரவு தேவை.

குறிப்பாக வடக்கு கிழக்கில் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. வடக்கு கிழக்கில் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை பொருத்தமான முதலீட்டுத் திட்டங்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். எனவே, வடக்கு – கிழக்கில் இந்தோனேசியாவின் முதலீடுகளை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]