வடக்கு, கிழக்குக்கு விசேட அதிகாரங்களைப் பகிரக் கூடிய புதிய அரசமைப்பே கொண்டுவரப்படும்

வடக்கு, கிழக்குக்கு விசேட அதிகாரங்களைப் பகிரக் கூடிய வகையில் புதிய அரசமைப்பொன்றை கொண்டுவருவதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசமைப்பு மறுசீரமைப்புக்கு மாத்திரமே நாங்கள் அனுமதிப்போம், புதிய அரசமைப்பொன்று கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு ஆதரவாளிக்க நாங்கள் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்துவரும் கருத்துகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அவ்வாறு கூறிவருவது முட்டாள்தனமாக கருத்தாகும். இன்னமும் அரசமைப்புத் தொடர்பிலான சட்டமூலம் கூட தயாரிக்கப்படவில்லை. கட்டாயமாக நாட்டில் புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும். அதன் அடிப்படையிலேயே அரசு செயற்பட்டு வருகிறது.

சுமந்திரன் உள்ளிட்டவர்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்குச் செல்ல வேண்டும் என்று கூறிவருகின்றனர். சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு கட்டாயம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் செல்லதான் வேண்டும். அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதென்றால் கட்டாயம் வெற்றிபெரும் வகையிலேயே செல்ல வேண்டும்.

நாட்டில் வாழும் அனைத்து இனங்களின் உரிமைகளையும் அரசியல் அதிகாரங்களையும் பிரதிபளிக்கும் வனையில் அரசமைப்பு அமையும். விசேடமாக வடக்கு, கிழக்குக்கு விசேட அதிகாரங்கள் பகிரப்படும். அதேபோன்று நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் அதிகாரம் பகிரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]