வடக்கு கிழக்கில் 522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, பொதுமக்களின் காணிகளில் உள்ள இராணுவ முகாமினை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு 866.71 மில்லியன் ரூபாயை இராணுவத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இராணுவ முகாமினை வேறு இடத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியை வழங்குவது குறித்த யோசனையொன்றை, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்திருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]