வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காணிகளில் உள்ள படை முகாம்களை வேறு இடத்தில் நிறுவி, அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில், குறித்த நிதியை ஒதுக்கீடு செய்ய திறைசேரி இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வட மாகாணத்தில் அச்சுவேலி, மயிலிட்டி வடக்கு, தென்மராட்சி, கிழாலி, பளை மற்றும் முகமாலை முதலான பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முரக்கோட்டஞ்சேனையிலும் குறித்த காணிகளை விடுவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த காணிகளை உறுதிப்படுத்த அந்தந்த பிரதேசங்களின் செயலாளர்கள், உரிமையாளர்களுடன் தொடர்புகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]