வடக்கு, கிழக்கில் காணாமல்போனோருக்கு நீதிகோரி ஹர்த்தார் போராட்டம் : தமிழ், முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவு

வடக்கு, கிழக்கில் காணாமல்போனோருக்கு நீதிகோரி ஹர்த்தார் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும் ஆதரவளித்துள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் மற்றும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தனியார் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் எனப் பலரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

வட,கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக பல வழிகளிலும் பல வருடங்களாக போராடி வருகின்ற போதிலும், அரசாங்கம் அவர்களுக்கான உரிய பதிலை வழங்காது மௌனம் காத்த வண்ணமே உள்ளது.

வடக்கு, கிழக்கு ஹர்த்தார் காரணமாக முடங்கியுள்ளதால் மக்களின் இயழ்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோரர் தொடர்ந்து தமது உறவுகள் குறித்து கேள்வியெழுப்பி வரும் சூழலில் அரசு அதற்கு பதில் அளிக்காமல் காலத்தை கடத்திய வண்ணமே உள்ளது. முன்னாள் மஹிந்த அரசும் இவ்வாறே பதில் அளிக்காமல் காலத்தை கடத்தியிருந்தது.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று இடம்பெறும் இந்த பூரண ஹர்த்தார் தொடர்பில் பல்வேறு கோணங்களில் எதிர்ப்பார்ப்புகள் வலுப்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]