வடக்கு கிழக்கிலே ‘தமிழர்’களுக்கு சரியான தலைமைத்துவம் இருந்தது.

தமிழர்

வடக்கு கிழக்கிலே ‘தமிழர்’களுக்கு சரியான தலைமைத்துவம் இருந்தது.

வடக்கு கிழக்கிலே சரியான தலைமைத்துவம் இருந்ததன் காரணமாக எங்களுடைய கலாசாரங்களுடன் எங்களுடைய வாழ்விடங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

பெரும் தேசிய கட்சியின் முகவராக செயற்படுபவர்கள் அவர்களுடைய தலைவர்கள் கூறுவதை வந்து பிரதேச மக்களுக்கு கூறுவார்களாகவே இருப்பார்கள். எமது மக்களுடைய பிரச்சினைகளை அவர்களின் தலைவர்களுக்கு கூறமுடியாது என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகம் செவ்வாய்கிழமை (02) மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு பல கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் வாக்கு கேட்டு வருவார்கள். ஆனால் தமிழர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு அணி மாத்திரமே உள்ளது.

நாங்கள் ஒற்றுமையை நிலைநாட்டுகின்றோம் எங்களுடைய தன்னிப்பட்ட கட்சியினருடைய இலாபங்கள் தனிப்பட்டவர்களின் இலாபங்கள் என்பவற்றையெல்லாம் துறந்து தமிழ் மக்களின் நன்மையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் ஒரே அணியிலே திரழவேண்டும் என்பது தமிழ் மக்களின் ஆணை என்றால் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர எவருக்கும் வாக்களிக்க மாட்டீர்கள்.

பெருந்தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி, என்பற்றில் தமிழர்களது பிரச்சினை தூசு போன்றது. எம்முடை பிரதேசத்தில் பச்சை மற்றும் நீலத்தைக் கொண்டுவந்து சிலர் வாக்கு கேட்கின்றார்கள் என்றால் அவர்களுடைய தலைவர்கள் கூறுவதை வந்து பிரதேச மக்களுக்கு கூறும் வெறும் முகவர்களாகவே இருப்பார்கள். மக்களுடைய பிரச்சினைகளை அவர்களின் தலைவர்களுக்கு கூறமுடியாது.

இரட்டொரு வீதிகள் ஒருவர் இருவருக்கு உத்தியோகம் என்பவற்றை அவர்களால் பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால் அந்த விடயங்களை வைத்து அவர்கள் ஏராளமாக உழைத்து விடுவார்கள். ஒருவர் இருவருக்கு உத்தியோகம் எடுத்துக் கொடுப்பதற்கு 100 பேரிடம் பணம் பெற்றிருப்பார்கள். இதுவே பச்சை, நீலக் கட்சிகளில் வேலை செய்யும் முகவர்களின் வேலையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுடைய முற்றுமுழுதான உரிமையை பெற்றெடுக்கும் கட்சி. 1949 ல் தந்தை செல்வாவின் சிந்தனையில் உருவாகிய இலங்கை தமிழரசுக் கட்சி அன்பின் தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பும் இல்லாமல் போயிருந்தால் இலங்கையிலே தமிழர்கள் காணாமல் போயிருப்பார்கள்.

சிலாபம் முன்னேஸ்வரர் ஆலயம் இருக்கிறது என்றார் தங்கு தமிழர்கள் வாழ்ந்தார்கள் இந்து மதம் பின்பற்றப்பட்டுள்ளது. அங்கு சிற்றரசு அமைத்து ஆரவள்ளி என்கின்ற ஆரசி புத்தளம் உட்பட அந்த பகுதிகளை ஆட்சி செய்துவந்தார். ஆனால் தற்போது அங்கு தமிழரின் அடையாளம் கிடையாது.

நீர்கொழும்பிலே பெனார்ண்டோ புள்ளை என்ற பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார். அவருடைய அம்மாவுக்கு தமிழ் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் கதைப்பார். அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது.

வடமேல் மாகாணத்தை அண்டிய பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்கள் அடையாளமற்றுப் போய்விட்டார்கள். தமிழர்கள் என்கின்ற நிலமை அங்கு இல்லை. கதிர்காமத்திலே முருகன் உள்ளார் அவரைச் சுற்றி இருந்த தமிழர்கள் இல்லை. அங்கு நாயக்க வம்வம் ஆட்சி செய்தது. கங்கையைக் கடந்து செல்லும் போது முருகனுடைய வேலும் ஓம் முருகா என்ற எழுத்தும் இருந்தது. இப்போது வேல் உள்ளது ஓம் முருகாவை காணவில்லை. தமிழர்களுடைய அடையாளம் அழிந்துவிட்டது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]