வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கும் மாவட்ட இராணுவ கட்டளைதளபதி!!

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார்.

யாழில் சிங்கள டிப்ளோமா கற்கைநெறியினை பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்..வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருட யுத்தம் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது.எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்அபிப்பிராயம் கொணெடவர்களாக இருக்கிறார்கள்.

30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள் பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள்.எனவத ற்போதைய இளைஞர் யுவதிகளுக்கும் நான் ஒன்றை கூற வருகிறேன்.

இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள் இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான் எனவே வடக்கு இளைஞர்களையும் இராணுவத்தில் இணைந்து இந்த நீட்டிற்கு சேவையாற்ற முன்வருமாறும் இராணுவதளபதி அழைப்பு விடுத்தார்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]