வடக்கில் 683 ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை: இராணுவம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

“மயிலிட்டி உள்ளிட்ட 4 கிராம அதிகாரி பிரிவுகளில் உள்ள இந்தக் காணிகள், வரும் 16ஆம் திகதி, யாழ். மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், காணிகளை விடுவிப்பதால், பாதுகாப்பில் பாதிப்புகள் ஏற்படுமா என்று மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வலி. வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட காணிகளின் வரைபடங்கள் இன்னமும் தமக்கு அனுப்பப்படவில்லை என்று யாழ். மாவட்டச் செயலக அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]iversaltamil.com