வடக்கிலிருந்து சென்னைக்கு கப்பல் சேவை

காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக இந்த பயணிகள் கப்பல் சேவை இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், டிசெம்பர் 24ஆம் நாள் தொடக்கம், ஜனவரி 3ஆம் நாள் வரை நடைபெறும் மார்கழி திருவாதிரை திருவிழாவில் ( ஆருத்திரா தரிசனம்) வடபகுதியில் உள்ள சிவ பக்தர்கள் பங்கேற்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இந்த விழாவில் பெரும் எண்ணிக்கையாளர் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]