வடக்கின் அடிப்படை வாதிகளே சர்வதேச விசாரணையை கோருகின்றனர்

வடக்கின் அடிப்படை வாதிகளே சர்வதேச விசாரணையை கோருகின்றனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் கூறுவது போன்று உள்ளக விசாரணைக்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றனர். சாதாரண பொது மக்கள் அவ்வாறு கூறவில்லை. இலங்கை இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் தீர்மானம் எடுக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குவதே அரசின் எதிர்பார்ப்பு என பதிலளித்துள்ளார்.

அத்துடன், 2016 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்யா சிறந்த வரவேற்பையளித்திருந்தது.

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாட்டை 48 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. கடந்த அரசின் காலத்தில் சர்வதேச ஆதரவு இருள் சூழ்ந்த யுகமாக காணப்பட்டது. இன்று அவை முற்றிலும் மாறியுள்ளது. அனைத்து நாடுகளும் இலங்கைக்கு நேசகரம் நீட்டியுள்ளன.

2014ஆம் ஆண்டு இலங்கை ஜெனிவாவுக்கு சென்றபோது 12 நாடுகள்தான் ஆதரவளித்திருந்தன. இன்று 47 நாடுகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

எமது நாட்டில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவுத் தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]