வடகொரிய ஜனாதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – ட்ரம்ப் 

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.
தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில், வடகொரிய ஜனாதிபதியை சாடி  ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா தன்னை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வட கொரியா முற்றிலும் அழிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கருத்து வெளியிட்டிருந்த,  வடகொரியா ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், அதற்கு பதிலடியாக, தமது டுவிட்டர் தளத்தில் மற்றுமொரு கருத்தை ட்ரம்ப் பதிவுசெய்துள்ளார்.
தமது செயற்பாடு மூலம் தமது நாட்டு மக்களையே வடகொரிய ஜனாதிபதி பட்டினி போட்டு கொன்று விடுவார் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]